தன்பாலின திருமணங்களுக்கு ஏன் சட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை?

காணொளிக் குறிப்பு, தன்பாலின திருமணங்களுக்கு உச்சநீதிமன்றம் சட்ட ரீதியான அங்கீகாரத்தை அனுமதி அளிக்கவில்லை
தன்பாலின திருமணங்களுக்கு ஏன் சட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை?

தன் பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் கோரிக்கை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செயல்பாட்டாளர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது.

தலைமை நீதிபதியின் தீர்ப்புக்கும் பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் தான் உள்ளது என அரசு கூறிய வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது செயல்பாட்டாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்டகால கோரிக்கை வெற்றிபெறவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.

தன்பாலின தி ருமணம்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)