பாலியல் துன்புறுத்தல் புகார்கள்: மல்யுத்த வீராங்கனைகளுக்கு மக்கள் ஆதரவு - பாஜக எம்.பி மீது வழக்கு பதிவு செய்கிறது போலீஸ்

பட மூலாதாரம், Getty Images
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதான விவகாரத்தில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு பல பிரபலங்களின் ஆதரவு கிடைக்கத் தொடங்கி உள்ளது.
இந்த வழக்கில் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தபோது இந்த ஆதரவின் விளைவை பார்க்க முடிந்தது.
இந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் கபில் சிப்பல் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மூத்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மற்றும் ஒலிம்பியன் அபினவ் பிந்த்ரா ஆகியோர் இந்த வீராங்கனைகளுக்கு ஆதரவு அளித்துள்ளனர். பிரபல நடிகர் சோனு சூட்டும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"நமது விளையாட்டு வீரர்கள் தெருவில் நீதி கோரிப் போராடுவதைப் பார்ப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்கள் நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த கடுமையாக உழைத்து நம்மை பெருமைப்படுத்தியவர்கள்,"என்று நீரஜ் சோப்ரா ட்வீட் செய்துள்ளார்.
"ஒரு நாடாக, ஒவ்வொரு நபரின் கண்ணியத்தையும் பாதுகாப்பது நமது பொறுப்பு. அது ஒரு விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி."என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இப்போது நடப்பது நடந்திருக்கக் கூடாது. இது ஒரு நாசூக்கான பிரச்சனை, இது நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் கையாளப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும்."
அநீதிக்கு எதிரான மல்யுத்தப் போரில் வீரர்கள் வெற்றி பெறுவார்கள்'
“விளையாட்டு வீரர்களாக, சர்வதேச அரங்கில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். ஆனால், இந்திய மல்யுத்த நிர்வாகத்தில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நமது விளையாட்டு வீரர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவது மிகுந்த கவலையளிக்கிறது,” என்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா ட்வீட் செய்துள்ளார்.
“இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் நான் இருக்கிறேன். இந்தப் பிரச்சனை சரியாக கையாளப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். விளையாட்டு வீரர்களின் கவலைகள் கேட்கப்பட்டு, இந்த விவகாரம் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தீர்க்கப்படவேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அதே நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும் ஜந்தர் மந்தரில் நடக்கும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மல்யுத்த வீராங்கனைகளின் படத்தைப் பகிர்ந்த அவர், "அவர்களுக்கு எப்போதாவது நீதி கிடைக்குமா?" என்று வினவியுள்ளார்.
இந்தப் படத்தைப் பகிரும் போது கபில் தேவ், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியாவையும் டேக் செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக சோனு சூட்டும் ட்வீட் செய்துள்ளார். "அநீதிக்கு எதிரான மல்யுத்தப் போரில் நாட்டின் வீரர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். ஜெய் ஹிந்த்" என்று அவர் எழுதினார்.
ஒரு நாள் முன்பு, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுடன் பேசிய மல்யுத்த வீரர் வினேஷ் போகட், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிற விளையாட்டு வீரர்களின் அமைதி குறித்து கேள்விகளை எழுப்பினார்.
அமெரிக்காவில் 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ்' இயக்கம் தொடங்கியபோது, வீரர்கள் குரல் எழுப்பினர். ஆனால் இன்று எங்கள் முறை வரும்போது யாரும் பேசத் தயாராக இல்லை என்று அவர் கூறியிருந்தார்.
வினேஷ் போகட்டின் இந்த நேர்காணலுக்குப் பிறகு, பல பெரிய வீரர்கள் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக முன்வரத் தொடங்கியுள்ளனர்.

பட மூலாதாரம், ANI
மல்யுத்த வீரர்களின் தர்ணா தொடர்பாக பி.டி.உஷா கூறியதற்கு சிவசேனையின் (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவு) தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான பிரியங்கா சதுர்வேதி கோபத்தை வெளியிட்டுள்ளார்.
"பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டிற்கு ஆளான நாடாளுமன்ற உறுப்பினர் தப்பித்துவிடுகிறார். பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக போராட வேண்டியிருப்பதுதான் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது. மன்னிக்கவும் மேடம், நாம் ஒரு சமூகமாக நமது விளையாட்டு வீராங்கனைகளுக்காக கூட்டாக குரல் எழுப்ப வேண்டும்."என்று பிரியங்கா சதுர்வேதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"அவர்கள் (வீராங்கனைகள்) நன்மதிப்பைக் கெடுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டக்கூடாது. அவர்கள்தான் நாட்டிற்கு மரியாதையை பெற்றுத்தந்து நாம் பெருமைப்படும் வாய்ப்பை அளிக்கிறார்கள்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், மாநிலங்களவை நியமன எம்.பியுமான பி.டி.உஷா, ”மல்யுத்த வீராங்கனைகள் தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்வது, நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது,” என்று கூறினார்.
பிரிஜ் பூஷண் ஷரண் சிங் கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANI
பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது எப்ஐஆர் பதிவு செய்து அவரை கைது செய்யக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் நடத்தும் போராட்டம் ஆறாவது நாளாகத் தொடர்கிறது.
மறுபுறம், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங், தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களுக்கு கவிதை மூலம் பதிலளித்துள்ளார்.
”இந்த நேரத்தில் எனக்கு ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. வாழ்க்கையின் நஷ்டத்தையும் ஆதாயத்தையும் கணக்கிடுவதில் நான் இறங்கும் நாள், போராட்டங்களை சமாளிக்கும் திறன் குறையும் நாள், வாழ்வின் இயலாமை என்மீது இரக்கம் காட்டும் நாள், அந்த நாளன்று வாழ்வைவிட இறப்பு முன்னால் நிற்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
"நண்பர்களே, நான் எனது வாழ்க்கையை மறுபரிசீலனை செய்யும் நாளில், நான் இழந்ததையும், நான் பெற்றதையும் எடைபோடும் நாளில், போராடும் திறன் முடிந்துவிட்டதாக நான் உணரும் நாளில், நான் ஆதரவற்றவன் என்று உணரும் நாளில், நான் அத்தகைய வாழ்க்கையை வாழ விரும்பமாட்டேன். அதுபோன்ற வாழ்க்கையை வாழ்வதற்கு முன்பு மரணம் என்னை நெருங்குவதை நான் விரும்புகிறேன்," என்று பிரிஜ் பூஷண் ஷரண் கூறினார்.
மல்யுத்த வீரர்களுக்கு மக்கள் ஆதரவு

இதற்கிடையில் ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது போல காணப்படுகிறது. போலீசார் நாலாபுறமும் தடுப்பு அமைத்துள்ளனர். பல்வேறு விவசாயிகள் மற்றும் மாணவர் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்து அங்கு வருகிறார்கள்.
விவசாயிகள் மற்றும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் அவ்வப்போது கேட்கின்றன. தடுப்புக்குள் அமர்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக உரையாற்றிக்கொண்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாய அமைப்புகள் மற்றும் குழு (Khap) பஞ்சாயத்துகளுடன் தொடர்புடையவர்கள். மத்திய அரசையும், பிரதமர் மோதியையும் விமர்சித்த அவர்கள், பாஜக எம்பியும் மல்யுத்த கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
ஜந்தர் மந்தரில் வியாழக்கிழமை அதிக கூட்டம் காணப்படவில்லை. ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கு இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள யாராவது பெரிய தலைவர் வருவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஜனவரியில் மல்யுத்த வீரர்கள், தலைவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் இந்த முறை தலைவர்கள் மேடைக்கு வருவது தடுக்கப்படவில்லை.
ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) தலைவர் ஜெயந்த் செளத்ரி மதியம் 12 மணியளவில் அங்கு வந்தார். அங்கு போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மல்லிக் உள்ளிட்டவர்களை அவர் சந்தித்தார்.
“அச்சம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பே வீரர்களின் பேச்சை அரசு கேட்டிருக்க வேண்டும்” என்றார் அவர்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் வீரர்களுக்கு ஆதரவாக ஹரியாணாவில் இருந்து பல காப் பஞ்சாயத்து உறுப்பினர்களும் வந்துள்ளனர். பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் டிகாயித்தும் அங்கு வந்தார்.
வீரர்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்றார் அவர். "கடந்த முறை விவசாயிகள் போராடியபோது அரசு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டியிருந்தது. இந்த முறையும் நீதி கிடைக்காவிட்டால், நாங்கள் இங்கேயே உட்காருவோம்," என்று பாரதிய கிசான் யூனியனின் டெல்லி மாநிலத் தலைவர் பிரேந்திர தாகர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 11க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் பங்கேற்கும் என அவர் தெரிவித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு பஜ்ரங் புனியா. இந்த போராட்டத்திற்கு ஆதரவை வழங்குமாறு காப் பஞ்சாயத்துகளிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் தாக்கத்தை வியாழக்கிழமை பார்க்கமுடிந்தது.
முழு விவகாரம் என்ன?

பட மூலாதாரம், ANI
2023 ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷி மல்லிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் டெல்லியின் ஜந்தர் மந்தரை அடைந்து, பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினர். பிரிஜ் பூஷண் சிங்கும், பயிற்சியாளரும், தேசிய முகாமில் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக வினேஷ் போகட் அழுதுகொண்டே கூறினார்.
இதைத் தொடர்ந்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வீரர்களைச் சந்தித்து, குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை ஜனவரி 23 அன்று அமைத்தார். இந்த குழுவின் தலைவராக மூத்த குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் தேர்வு செய்யப்பட்டார். விசாரணையை நான்கு வாரங்களுக்குள் முடிக்குமாறு குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த குழு தனது அறிக்கையை அரசிடம் கொடுத்துள்ளது. ஆனால் அது இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஏப்ரல் 21 ஆம் தேதி, பிரிஜ்பூஷண் சிங்குக்கு எதிராக கனாட் பிளேஸ் காவல் நிலையத்திற்கு புகார் செய்யச்சென்றதாகவும், ஆனால் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்றும் மல்யுத்த வீராங்கனைகள் கூறுகிறார்கள்.
ஏப்ரல் 23 ஆம் தேதி ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மல்லிக் மற்றும் வினேஷ் போகட் தலைமையில் மல்யுத்த வீரர்கள் இரண்டாவது முறையாக பிரிஜ்பூஷண் ஷரண் சிங்குக்கு எதிராக களமிறங்கினார்கள். ஆறாவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












