சூடானில் ஆன்மீகப் போர்வையில் பெண்களிடம் அத்துமீறும் ஹீலர்கள் - பிபிசி புலனாய்வு

காணொளிக் குறிப்பு, சூடானில் ஆன்மீகப் போர்வையில் பெண்களிடம் அத்துமீறும் ஹீலர்கள் - பிபிசி புலனாய்வு
சூடானில் ஆன்மீகப் போர்வையில் பெண்களிடம் அத்துமீறும் ஹீலர்கள் - பிபிசி புலனாய்வு

சூடானில் தீய ஆவிகளை விரட்டுபவர்கள் என்று கூறிக் கொள்ளும் ஹீலர்கள் தங்களை தனிமையில் சந்திக்கும் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

பிபிசி அரபி சேவை புலனாய்வுக் குழு இதுதொடர்பாக ஷேக் இப்ராகிம் என்ற ஹீலரிடம் பெண் செய்தியாளரை அனுப்பிய போது சில பெண்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது தெரியவந்தது.

இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தை வைத்துக் கொண்டு, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், பாதியிலேயே இணைப்பை துண்டித்துவிட்டார்.

பிபிசி அரபி சேவை தம் வசமுள்ள ஆதாரங்களை சூடானின் உயர்மட்ட மத அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளது.

பெண்களிடம் அத்துமீறும் ஹீலர்கள்
படக்குறிப்பு, ஷேக் இப்ராகிம், ஹீலர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: