இந்தியா - கனடா விவகாரம் குறித்து இலங்கை என்ன சொல்கிறது? இலங்கையின் ஆதரவு யாருக்கு?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரத்தில் முன்வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் போலவே இலங்கையில் நடக்காத ஒரு இனப்படுகொலையை நடந்ததாக கூறினார் என இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஒரு பேட்டியில், இந்தியா-கனடா இடையிலான ராஜீய நெருக்கடி குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
"பயங்கரவாதிகள் சிலர் தங்களுக்கு கனடாவில் பாதுகாப்பான புகலிடத்தை கண்டறிந்துள்ளனர். கனடா பிரதமர் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இப்படித்தான் சில மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.
இதையேதான் இலங்கைக்கும் செய்தார்கள் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக பயங்கரமான முழுக்கமுழுக்க பொய் சொன்னார்கள். இலங்கையில் எந்தவொரு இனப் படுகொலையும் நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்" என அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



