'குடிநீரில் மலம் கலப்பு' இறையூர் கிராமத்தில் நடந்தது என்ன? - கள நிலவரம்

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கொட்டப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தொட்டியில் இருந்து வந்த குடிநீரைப் பருகிய குழந்தைகள் பலரும் தொடர்ந்து உடல் நலப் பாதிப்புக்குள்ளான நேரத்தில்தான் தண்ணீரில் மலம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதைச் செய்தவர்கள் யார் என்பது தற்போதுவரை கண்டறியப்படவில்லை. இதற்கிடையில், அங்கு இரட்டைக் குவளை முறை மற்றும் தலித்துகளுக்கு கோயிலுக்குள் நுழைவதற்கு தடை போன்ற தீண்டாமை வடிவங்கள் இருந்ததாக மாவட்ட ஆட்சியர் கண்டறிந்ததால், மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவங்கள் காரணமாக தலித் மற்றும் பிற சமூகத்தினர் இடையே ஒற்றுமை குலையக்கூடாது என்ற நோக்கத்தோடு, மாவட்ட நிர்வாகம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. அங்கு மக்களிடையே தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.
கள நிலவரம் என்ன? இறையூர் கிராமத்திற்கு நேரில் சென்ற பிபிசி தமிழ் தரப்பிடமும் பேசியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



