ஆப்கன்: தாலிபன் கட்டுப்பாட்டைத் தாண்டி ரகசியமாக படித்து மருத்துவராகி சாதித்த பெண்

காணொளிக் குறிப்பு, ஆப்கானிஸ்தானில் ரகசியமாக படித்து மருத்துவராகி சாதித்த பெண்
ஆப்கன்: தாலிபன் கட்டுப்பாட்டைத் தாண்டி ரகசியமாக படித்து மருத்துவராகி சாதித்த பெண்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் முதன்முறையாக அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, ரகசியமாக படிப்பைத் தொடர்ந்தார் ஸகிரா. தங்கள் பகுதிக்கு தாலிபன்கள் வந்தாலே ஓடி ஒளிந்துகொள்வோம் என்று அவர் கூறுகிறார்.

தன்னுடைய தாய் படிக்கவில்லையென்றும் அவருடைய ஆடைகளை விற்று தன்னை படிக்க வைத்ததாகவும் தெரிவிக்கிறார் ஸகிரா.

தற்போது அகதிகளுக்கு உதவும் தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார். 60க்கும் மேற்பட்ட நகரங்களில் அகதிகளுக்கான கல்வி தொடர்பான உதவிகளை அந்த அமைப்பு வழங்கிவருகிறது.

மேலும், அகதிகளுக்கான குடியிருப்பு தொடர்பான உதவிகளையும் அவரின் அமைப்பு வழங்குகிறது.

மருத்துவரான இவரின் திசையை ஒரு சம்பவம் மாற்றியிருக்கிறது.

அந்த சம்பவம் என்ன, அவருடைய அமைப்பில் வேறு என்ன உதவிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து விரிவாக இந்த காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)