விளக்கப்படம்: கிம் ஜாங் உன் குண்டு துளைக்காத ரயில் தவிர வேறு எப்படியெல்லாம் பயணிப்பார்?
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் வெளிநாடு செல்லும்போது, குண்டு துளைக்காத ரயிலில் பயணிப்பதையே விரும்புவார்.
மிகவும் பாதுகாப்பான அந்த ரயிலின் வேகம் மணிக்கு 50 கி.மீ. மட்டுமே. அதற்குள் ஆடம்பரமான இருக்கைகள் அவருக்கும், குழுவினருக்கும் உள்ளன.
கிம் தனி விமானத்திலும் பயணம் செய்வார். 2018 மே மாதம் சீனாவுக்கு விமானத்தில் சென்ற கிம், அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.
கிம் சொகுசு கார்களையும் பயன்படுத்துகிறார். மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் அவரது விருப்பமாக உள்ளது.

பட மூலாதாரம், Reuters
நள்ளிரவு நேரத்தில் கிம் வட கொரியா தலைநகர் பியாங்யோங் நகரில் பேருந்தில் வலம் வருகிறார். அங்கே புகைப்பிடிக்கவும் அனுமதி இருப்பதாக தெரிகிறது.
கிம் படகு, நீர்மூழ்கிக் கப்பல், மற்றும் ஸ்கை லிஃப்ட் ஆகியவற்றிலும் பயணிப்பதை வட கொரிய அரசு ஊடகத்தில் பார்க்க முடிகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு








