காணொளி: செய்தியாளரின் கேமராவை எடுத்துச் சென்ற பனிச்சறுக்கு நாய்

காணொளிக் குறிப்பு, செய்தியாளரின் கேமராவை எடுத்துச் சென்ற பனிச்சறுக்கு நாய்
காணொளி: செய்தியாளரின் கேமராவை எடுத்துச் சென்ற பனிச்சறுக்கு நாய்

ஆர்க்டிக் பனிச்சறுக்கு நாய் ஒன்று சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ($700) கேமராவை எடுத்துச் , அதை கடித்து விளையாடும் பொருளாக பயன்படுத்தியுள்ளது.

"நாய் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டி படப்பிடிப்பின் போது, ஒரு குட்டி நாய் கட்டாமல் இருந்ததால், என் 360 கேமராவை திருடி பதிவு செய்யும் பொத்தானை அழுத்தியது, அது பதிவு செய்யத் தொடங்கியது."

"ஆரம்பத்தில் எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் இரவில் அந்த இடத்தில் கேமராவை நாங்கள் பார்த்தோம். அது பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும், அது கேமராவை கடித்ததையும், பின்னர் அதை பனிச்சறுக்கு வண்டியின் கீழே மறைக்க முயன்றதையும் பார்த்தோம்." என ஏபி செய்தியாளர் எவ்ஜெனி மாலொலெட்கா தெரிவிக்கிறார்.

கிரீன்லாந்தைப் பாதிக்கும் உலகளாவிய நிகழ்வுகளை ஏபி செய்தியாளர்கள் செய்தி சேகரித்து கொண்டிருந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு