காணொளி: மாவோயிஸ்ட் நடுவே பத்திரிகையாளரின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
காணொளி: மாவோயிஸ்ட் நடுவே பத்திரிகையாளரின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
சத்தீஸ்கரில் உள்ள ஒரு தொலைதூர, அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி. இந்த பகுதி பல தசாப்தங்களாக இந்திய பாதுகாப்பு படைகளுக்கும் நக்சலைட்டுகள் என அழைக்கப்படும் இடதுசாரி மாவோயிஸ்ட் குழுவினருக்கும் இடையே மோதலைக் கண்டுள்ளது.
2000ஆம் ஆண்டிலிருந்து, இந்த மோதல் குறைந்தது 12,000 உயிர்களை பறித்துள்ளது. இதில் பாதுகாப்பு படையினர், மாவோயிஸ்ட்கள் மற்றும் பொதுமக்கள் அடங்குவர். இந்தப் பகுதி பல தலைமுறைகளாக இங்கு வசித்து வரும் பழங்குடி சமூகங்களின் தாயகமாக உள்ளது.
இந்தியாவின் மிக தொலைதூர மற்றும் அதிக ராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இந்த இடத்தில் இந்த செய்தியாளர்கள் தங்கள் உயிரை ஆபத்தில் வைத்து பணியாற்றுகிறார்கள்.
இவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



