காணொளி : இரானில் மழைக்காக கண்ணீருடன் மக்கள் பிரார்த்தனை
காணொளி : இரானில் மழைக்காக கண்ணீருடன் மக்கள் பிரார்த்தனை
இரான் தலைநகர் தெஹ்ரானில் மழை வேண்டி மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கடந்த சில தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு இரானில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் தெஹ்ரான் முன்னெப்போதும் இல்லாத அளவு வறட்சியை எதிர்கொண்டுள்ளது.
விரைவில் போதுமான மழை பெய்யவில்லை என்றால், தெஹ்ரானின் நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்படும், அதுவும் பலனளிக்கவில்லை என்றால் தெஹ்ரானை விட்டு மக்கள் வெளியேற வேண்டியிருக்கும் என அதிபர் மசூத் பெசெஷ்கியன் முன்னதாக தெரிவித்திருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



