அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வாலை கடித்த நபர், எட்டி உதைத்த காளை – காணொளி
ஜல்லிக்கட்டு காளை ஒன்று அதன் உரிமையாளரை எட்டி மிதித்த காட்சி இது.
இதனால் உரிமையாளர் தூக்கி வீசப்பட்டார். இந்த காணொளி சமுக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
காளையின் வாலை, அதனை அழைத்து வந்த நபர் கடிப்பதை இந்த காணொளியில் பார்க்க முடிகிறது.
இதன் பின்னணி என்ன?
மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திங்கள் கிழமை (ஜனவரி 15) அவனியாபுரத்தில் காளைகள் பரிசோதனை செய்யும் இடத்துக்குக் காளை வர மறுத்ததாகவும், இந்நிலையில் அதன் உரிமையாளர் காளையின் வாலை கடித்ததாக சம்பவ இடத்தில் இருந்த நபர்கள் பிபிசி தமிழிடம் கூறினர்.
காளையின் வாலை கடித்த மாட்டின் உரிமையாளரை காளை பின்னங்காலிலேயே மிதித்தது. இதையடுத்து அந்த நபர் தூக்கி வீசிப்பட்டார். காளையை கயிற்றில் கட்டி இழுத்துச் சென்றவர்கள் காளையை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.
காளையின் மிதியால் அதிர்ந்து, அந்த இடத்திலேயே அமர்ந்த காளையை அழைத்து வந்த நபர், சிறுது நேரம் கழித்து தனது மாட்டுடன் கிளம்பிச் சென்றுவிட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறினர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



