"ஒரு காலத்தில் பிச்சை எடுத்தேன், இன்று புகைப்படக் கலைஞர்"- திருநங்கை ஒருவரின் தன்னம்பிக்கை கதை

காணொளிக் குறிப்பு, `ஒரு காலத்தில் பிச்சை எடுத்தேன், இப்போ புகைப்படக் கலைஞர்`
"ஒரு காலத்தில் பிச்சை எடுத்தேன், இன்று புகைப்படக் கலைஞர்"- திருநங்கை ஒருவரின் தன்னம்பிக்கை கதை

உழைச்சு வாழ முடியாதானு இந்த சமூகம் என்னை பாத்து நிறைய முறை கேள்வி கேட்டது. இப்போ அதை நான் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன் என்று கூறுகிறார் திருநங்கையான ஆஷா.

தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் ஆஷா தற்போது வசித்து வருகிறார்.தன்னை குறித்து பேசும்போது, `பட்டப்படிப்பு முடிச்சு இருக்குற எனக்கு போட்டோகிராபியும், கிராபிக் டிசைனிங்கும் தெரியும். இதுக்கு முன்னாடி பிச்சை எடுத்து பிழைப்ப நடத்திட்டு இருந்தேன். அப்போது ஒரு விபத்தில் மயிரிழையில் நான் உயிர் தப்பினேன். அந்த விபத்துக்கு அப்புறம் எனக்குள் பல சந்தேகம் எழுந்தது. நான் ஏன் இப்படி வாழ வேண்டும்? என் வாழ்வில் வேற என்ன செய்யலாம்?

ஏதாச்சும் வேலைக்குப் போகலாமா? தொழில் எதாவது செய்யலாமா? இந்த மாதிரி பல கேள்வி எனக்குள்ள எழுந்துச்சு. நான் படிச்சிருக்கேன். மத்த திருநங்கைகூட நான் தங்கியிருந்தாலும், படிப்பை மட்டும் கைவிடல. படிப்பை முடிச்ச அப்புறம், கிராபிக்ஸ் டிசைனிங் பத்தி படிச்சேன். போட்டோகிராபியும் கத்துகிட்டேன். போட்டோகிராபி துறையில நான் நுழைஞ்சப்போ, ஏன் இவங்க இத செய்யனும்? இந்தத் தொழிலுக்கு இவங்க ஏன் வரனும் அப்படினு நிறைய பேரு பேசுனாங்க. அதைப் பத்தி நான் கவலைப்படல` என்றார். (முழு தகவல் காணொளியில்)

திருநங்கை ஆஷா
படக்குறிப்பு, திருநங்கை ஆஷா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: