40 வயதில் முடியை இழந்து அழகிப் போட்டியில் வென்ற தன்னம்பிக்கை பெண்
40 வயதில் முடியை இழந்து அழகிப் போட்டியில் வென்ற தன்னம்பிக்கை பெண்
கேதகி ஜானிக்கு 40 வயது இருக்கும் போது, அவருக்கு அலோபீசியா அரேட்டா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் ஒரு நிலை. சில மாதங்களில் முற்றிலும் முடியற்றவர் ஆன அவர், முடிக்கும் அழகுக்கும் சம்பந்தம் இல்லை என தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்துள்ளார்.
தலைமுடியை முற்றிலும் இழந்த அவர், தன் தலையில் அழகாக பச்சைக் குத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, Mrs.Universe போட்டியில் முடி இல்லாமல் பங்கேற்றுள்ளார். பல்வேறு காரணங்களால் முடி இழந்த பெண்களுக்கு ஊக்கமாக அவர் உள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



