'அந்த விஷயத்தில்' குரங்கும் மனிதனும் ஒன்றுதான் - இதோ ஆதாரம்

ஒரே மாதிரியான சைகைகளை பகிர்ந்துகொள்ளும் மனிதர்கள், காட்டு குரங்குகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விக்டோரியா கில்
    • பதவி, அறிவியல் நிருபர், பிபிசி செய்தி

மனிதர்கள் மற்ற குரங்குகளுடன் பொதுவான சைகை மொழியைப் பகிர்ந்து கொள்கிறார்கள், காட்டு சிம்ப்பன்ஸி மற்றும் பொனொபோஸ்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தும் பல சைகைகளைப் புரிந்துகொள்கிறார்கள். குரங்கு சைகைகளை தன்னார்வலர்கள் மொழிபெயர்த்த வீடியோ அடிப்படையிலான ஆய்வின் முடிவு இதுதான்.

இந்த ஆய்வு செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

சிம்பன்ஸிகளுடன் நாம் கடைசியாகப் பகிர்ந்து கொண்ட பொதுவான மூதாதையர் இதே போன்ற சைகைகளைப் பயன்படுத்தியதாகவும், இவை நம் மொழிக்கான "தொடக்கப் புள்ளியாக" இருந்திருக்கலாம் என்றும் இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது. பிஎல்ஓஎஸ் பயோலஜி என்னும் அறிவியல் இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் கிரிஸ்டி கிரஹாம் விரிவாக பேசுகையில், காட்டு குரங்குகள், சிம்ப்பன்ஸிகள், பொனொபோ போன்றவை தொடர்புகொள்ளும்போது வெளிப்படுத்தும் சைகைகள் 95 சதவீதம் ஒன்றுடன் ஒன்று பொருந்திப்போவது பற்றி நமக்கு தெரியும். 

“எனவே, நமக்கும் குரங்குகளுக்கும் பொதுவான முன்னோர்களிடமும் இருந்த பொதுவான சைகைகள் இதுவா என்று எங்களுக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது. ஆனால், நம் முன்னோர்கள் சைகை செய்வதைத் தொடங்கியிருப்பார்கள் என்றும், இது மொழியுடன் இணைந்தது என்றும் நாங்கள் இப்போது உறுதியாக நம்புகிறோம்.”

குரங்குகளின் தொடர் திறனை கவனமாக ஆய்வு செய்து அதன்மூலம், மொழி மூலத்தை புரிந்துகொள்வதற்கான அறிவியல் பணியின் ஒருபகுதியாக இந்த ஆய்வு உள்ளது. 

காட்டு சிம்பன்ஸிகளை ஆய்வு செய்வதில் இந்த ஆராய்ச்சி குழுவினர் பல ஆண்டுகளை செலவிட்டனர். காட்டு குரங்குகள் தங்கள் குழுவில் உள்ள பிற உறுப்பினர்களுடன் செய்திகளை பகிர்ந்துகொள்ள 80க்கும் மேற்பட்ட சைகைகளை கொண்ட அகராதியை பயன்படுத்துகின்றன என்பதை அவர்கள் முன்னரே கண்டுபிடித்திருந்தனர்.

எனக்கு தடவிவிடு என்பதை நீண்ட கீறல் செய்கை மூலமும், அந்த உணவை எனக்கு தா என்பதை மற்ற குரங்கின் வாயை தடவுவது மூலமும், தனது ஈர்ப்பை வெளிப்படுத்த இலைகளை பற்கள் மூலம் கிழிக்கும் செய்கைகள் மூலமும் சிம்ப்பன்ஸிகள் வெளிப்படுத்துகின்றன. 

விஞ்ஞானிகள் வீடியோ பிளேபேக் சோதனைகளைப் பயன்படுத்தினர், ஏனெனில் இந்த அணுகுமுறை பாரம்பரியமாக மனிதரல்லாத விலங்குகளில் மொழிப் புரிதலைச் சோதிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வில், மனிதர்களின் நெருங்கிய வாழும் குரங்கு உறவினர்களின் சைகைகளைப் புரிந்துகொள்ளும் திறன்களை மதிப்பிடுவதற்கான அணுகுமுறையை அவர்கள் தலைகீழாக மாற்றினர்.

ஒரே மாதிரியான சைகைகளை பகிர்ந்துகொள்ளும் மனிதர்கள், காட்டு குரங்குகள்

பட மூலாதாரம், Alamy

சிம்ப்பன்ஸி மற்றும் பொனொபோஸ் சைகைகளின் வீடியோக்களைப் பார்த்தனர், பின்னர் பல தேர்வு மொழி பெயர்ப்புப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்தனர். 

பங்கேற்பாளர்கள் எதிர்பார்த்ததை விட கணிசமாக சிறப்பாக செயல்பட்டனர், 50 சதவீதத்திற்கும் மேலான நேரத்தில் சிம்பன்ஸி மற்றும் பொனொபோ சைகைகளின் அர்த்தத்தை சரியாக விளக்கினர். 

“முடிவுகளை கண்டு நாங்கள் உண்மையிலேயே ஆச்சரியம் அடைந்தோம் ” என செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த காத்ரீன் ஹோபைட்டர் தெரிவித்தார். 

“தொடர்பின் பரிமாண வளர்ச்சியின் கூறாக இது கவர்ச்சிகரமானது அதேவேளையில், ஒரு விஞ்ஞானியாக அதை எப்படி செய்வது என்று பல ஆண்டுகளாக பயிற்சி அளித்ததால் மிகவும் எரிச்சலூட்டுகிறது,” என்று நகைச்சுவையாக அவர் கூறினார்.

மருத்துவர் கிரஹாம், “நாம் உட்பட அனைத்து பெரிய குரங்கு இனங்களிலும் பரிணாம ரீதியாக பழமையான, பகிரப்பட்ட சைகை சொற்களஞ்சியம் ” என்று விவரிப்பது மக்கள் இயல்பாக புரிந்துகொள்ளக்கூடிய சைகைகளின் ஒருபகுதியாகவும் இருக்கலாம். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: