மேலும் இரண்டு பிணை கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
மேலும் இரண்டு பிணை கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலிலிருந்து கடத்திய சுமார் 200 பிணய கைதிகளில் 2 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளது. ஏற்கெனவே இரண்டு அமெரிக்க பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இஸ்ரேலிய பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 85வயது மற்றும் 79வயதிலானவர்கள். அவர்களின் வயது மற்றும் உடல்நிலை கருதி அவர்களை விடுவிப்பதாக ஹமாஸ் ஆயுத பிரிவின் தலைவர் டெலிகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கப்பட்டு பின் அவர்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ரஃபா எல்லையில் இஸ்ரேலிய பெண்களை கொண்டு சேர்த்தனர்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



