இந்தியாவில் ஆண்டுக்கு 50,000 பேர் பாம்பு கடிக்கு பலி - காணொளி
இந்தியாவில் ஆண்டுதோறும் 30 முதல் 40 லட்சம் பேர் பாம்பு கடிக்கு உள்ளாகின்றனர். இதில் 50,000 முதல் 60 பேர் உயிரிழக்கின்றனர். பாம்பு கடி உயிருக்கு ஆபத்தாக மாறாமல் இருக்க, நேரம் மிக முக்கியமானதாகும்.
பாம்பு கடித்தவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவரை அணுக வேண்டும். சில இடங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் முதலில் மந்திரவாதியிடம் கூட்டிச் செல்கின்றனர். இதனால் நேர விரயமாகிறது.
ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரையிலான பாம்பு கடிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் பன்மடங்கு உயாந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வெப்பம் தாங்காமல் பாம்புகள் வெளிவருவதாக கூறும் நிபுணர்கள் இதற்கு காலநிலை மாற்றமும் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



