காணொளி: தேஜஸ் போர் விமான விமானியின் இறுதிச்சடங்கில் கூடிய மக்கள்
தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்த இந்திய விமானப் படை விங் கமாண்டர் நாமான்ஷ் சியாலின் இறுதிச்சடங்கில் எடுக்கப்பட்ட காட்சிகள் இவை.
அவரது சொந்த ஊரான ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கங்ராவில் நடைபெற்ற இறுதிச்சடங்கில், உறவினர்கள், இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அவரது மனைவி விங் கமாண்டர் அப்ஷான் அக்தர், மகள் ஆகியோர் உட்பட நூற்றுக்கணக்கானோர் விடை கொடுக்கக் கூடினர்.
நாமான்ஷ் இந்திய விமான படையின் 45 Squadron-ஐ சேர்ந்தவர் என்பதால் துபையில் இருந்து அவரது உடல் அவர் சேர்ந்த 45 Squadron-ன் Home Station ஆன கோவையின் சூலூர் விமான தளத்துக்கு கொண்டுவரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
தேஜஸ் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் தாயாரித்த தேஜஸ் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் போர் விமானமாகும்.
கடந்த 21-ம் தேதி துபையில் விமானக் கண்காட்சியின் போது தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
வான்படை வெளியிட்ட அறிக்கையில், விங் கமாண்டர் நாமான்ஷ் சியால் “அசாதாரண திறனும், அசைக்க முடியாத கடமை உணர்வும் கொண்ட, நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய போர் விமானி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தின் காரணத்தை விசாரிக்க ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



