காணொளி: ஹைதராபாத்தில் மெஸ்ஸியைக் காண சென்ற தமிழ் ரசிகர்கள் கூறியது என்ன?
காணொளி: ஹைதராபாத்தில் மெஸ்ஸியைக் காண சென்ற தமிழ் ரசிகர்கள் கூறியது என்ன?
உலகின் முன்னணி கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய மெஸ்ஸியை ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கொல்கத்தாவில் நிறுவப்பட்டிருந்த தனது 70 அடி முழு உருவச் சிலையை காணொளி முறையில் மெஸ்ஸி திறந்துவைத்தார்.
மெஸ்ஸி இன்று இரவு ஹைதராபாத் சென்றார். அங்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவர் சந்திக்கிறார். அங்கு ஒரு காட்சிப் போட்டியும், இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
ஹைதராபாத்தில் மெஸ்ஸியைக் காண சென்ற தமிழ் ரசிகர்கள் கூறுவது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



