இரான் Vs சௌதி அரேபியா: இந்த இஸ்லாமிய நாடுகள் நெருங்கி வருவது ஏன்?
சௌதி அரேபியாவும் இரானும் மத்திய கிழக்கில் இஸ்லாமிய உலகின் தலைமைக்கு போட்டியிடும் முக்கியமான நாடுகள்.
சௌதி அரேபியாவில் சுன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இரானில் ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மத்திய கிழக்கின் செல்வாக்கு மிக்க இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு சிக்கல் நிறைந்தது மட்டுமின்றி பதற்றமானதும் கூட.
மதம், அரசியல் மற்றும் பிராந்திய காரணிகள் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பாதிக்கின்றன. ஆனால், மார்ச் 2023 இல் சௌதி - இரான் இடையே சீனாவின் மத்தியஸ்தம், கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான மோதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் இருந்து இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஒரு காலத்தில் எதிரெதிரே நிற்பதாகத் தோன்றிய இந்த நாடுகள் இப்போது நெருங்கி வருவதைக் காண முடிகிறது. இரு நாடுகளும் இடைவெளியைக் குறைத்து ஒன்றிணைய முயல்கின்றன என்பது சமீபத்திய முன்னேற்றங்களிலிருந்து தெளிவாகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



