இரானுக்கு எதிரான 12 நாள் போரில் இஸ்ரேல் தன் இலக்கை அடைந்ததா?
இஸ்ரேல் - இரான் இடையிலான மோதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சண்டை நிறுத்தம் அறிவித்ததன் மூலம் முடிவுக்கு வந்தது. இந்த மோதலில் இஸ்ரேலால் தன் இலக்கை அடைய முடிந்ததா? வல்லுநர்கள் கூறுவது என்ன?
இரானுடனான இந்த மோதல், 1967-இல் மூன்று நாடுகளுடன் இஸ்ரேல் நடத்திய ஆறு நாள் போருடன் ஒப்பிடப்படுகிறது.
பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆய்வாளரான யோனா ஜெர்மி பாப் இஸ்ரேலின் ஆங்கில செய்தித்தாளான ஜெருசலேம் போஸ்டில் எழுதிய கட்டுரையில், "1948-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேல், 1967-ல் நடந்த ஆறு நாள் போரில், மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றியது. இஸ்ரேல் ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியது" என எழுதியுள்ளார்.
மேலும், "இஸ்ரேல் எகிப்து, சிரியா மற்றும் ஜோர்டான் ஆகிய மூன்று நாடுகளை அந்த போரில் தோற்கடித்தது. அந்த போருக்குப் பிறகு, சினாய், கோலன், மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் போன்ற பகுதிகள் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டன" எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலும், இரானும் ஒருபோதும் சமமாக இருந்ததில்லை என கூறும் பாப், பாதகமான சூழ்நிலையை எதிர்த்துப் போராடும் வளங்கள், பொறுமை மற்றும் திறன் உள்ளதென்று இரான் நிரூபித்துள்ளது எனவும் கூறுகிறார்.
அந்த வகையில் சமீபத்திய இஸ்ரேல் - இரான் மோதலில் யார் வெற்றி பெற்றுள்ளனர்? வல்லுநர்கள் கூறுவது என்ன என்பதை விரிவாக இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



