கான் யூனிஸ்: இஸ்ரேல் படைகள் சுற்றி வளைத்து தாக்கும் நகரின் தற்போதைய நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, தெற்கு காஸாவில் தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்; 50 பேர் பலி - காணொளி
கான் யூனிஸ்: இஸ்ரேல் படைகள் சுற்றி வளைத்து தாக்கும் நகரின் தற்போதைய நிலை என்ன?

இஸ்ரேலின் வான் வழித் தாக்குதலால் காஸாவின் கான் யூனிஸில் உள்ள கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரியும் காட்சி இது... அருகில் இருந்த கட்டடங்களும் முற்றிலுமாக இடித்து தரைமட்டமாகியுள்ளன...

காஸாவில் கான் யூனிஸ் உள்பட தெற்குப் பகுதி மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. சனிக்கிழமை காலையில் கான் யூனிஸ் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறுகிறது.

கான் யூனிஸ் பகுதி இஸ்ரேலிய டாங்கிகளால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்து சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. கான் யூனிஸின் முக்கியப் பகுதியான ஜலால் வீதியை நோக்கி டாங்கிகள் நகர்வதாக பிபிசி செய்தியாளர் ருஷ்டி அபு அலூஃப் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் காஸா மீது தாக்குதலை தொடங்கிய முதல் வாரத்தில் வடக்கு காஸாவில் இருந்த மக்கள் கான் யூனிஸை நோக்கி இடம்பெயர்ந்த நிலையில், தற்போது இந்த பகுதியும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதால், இங்குள்ள மக்கள் ரஃபாவை நோக்கி மீண்டும் இடம்பெயர துவங்கியுள்ளனர்.

எங்கு செல்வதென்றே தெரியவில்லை என காஸா மக்கள் கவலை தெரிவிப்பதாக பிபிசி செய்தியாளர் ருஷ்டி அபு அலூஃப் கூறுகிறார்.

கான் யூனிஸில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள நாசர் மருத்துவமனை நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துமனைக்கு நூற்றுக்கணக்காநோர் சிகிச்சைக்கு குவிந்து வருவதாகவும் பலரது உடல்கள் கொண்டு வரப்படுவதால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை என நாசர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தெற்கு காஸாவில் தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்; 50 பேர் பலி - காணொளி

பட மூலாதாரம், reuters

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)