அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - அண்ணாமலை போட்ட சபதம் என்ன?

காணொளிக் குறிப்பு,
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - அண்ணாமலை போட்ட சபதம் என்ன?

திமுக அரசைக் கண்டித்து டிசம்பர் 27ஆம் தேதியன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாளை காலை 10 மணிக்கு தனக்குத் தானே இந்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை தான் செருப்பு அணியப் போவதில்லை என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்துப் பேசியுள்ளார். அப்போது, "ஒவ்வொரு பாஜகவினர் வீட்டிலும் இனி போராட்டம் நடைபெறும்.

திமுக அரசைக் கண்டித்து எனது இல்லத்தின் அருகே நாளை காலை 10 மணிக்கு 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன்," என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, தான் இனி வழக்கமான அரசியல் செய்யப் போவதில்லை எனவும் "நிர்பயா நிதி ஒதுக்கப்படும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கிடையாது. நான் காவல்துறையில் இருந்திருந்தால் வேறுவிதமாக நடவடிக்கை இருந்திருக்கும்," என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)