வினேஷ் போகாட்: ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு சென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை - இவர் யார்?

காணொளிக் குறிப்பு, வினேஷ் போகாட்: ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு சென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை - இவர் யார்?
வினேஷ் போகாட்: ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு சென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை - இவர் யார்?

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் 3 முறை ஒலிம்பிக் சென்றவர்.

இந்தியாவுக்காக பல பதக்கங்களை வென்றவர்.

இறுதிப் போட்டிக்கு சென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் பெற்றார்.

ஆனால் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் விளையாட்டு பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர்.

இவரது சகோதரி, உறவினர்கள் சர்வதேச அரங்கில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.

2019, 2022-ல் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார்.

ஆசிய போட்டிகளில் தங்கம், வெண்கலமும், காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களும் வென்றார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிரான போராட்டத்தின் முக்கிய முகமாக இருந்தார்.

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதை பிரிஜ் பூஷன் மறுக்கிறார்.

2024-ல், ஹரியாணாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரானார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)