பொம்மன் பெல்லியிடம் ஒப்படைக்கப்பட்ட 4 மாத குட்டி யானை - மகிழ்ச்சியில் பழங்குடியின தம்பதி (காணொளி)

காணொளிக் குறிப்பு, பொம்மன் பெல்லியிடம் ஒப்படைக்கப்பட்ட 4 மாத குட்டி யானை
பொம்மன் பெல்லியிடம் ஒப்படைக்கப்பட்ட 4 மாத குட்டி யானை - மகிழ்ச்சியில் பழங்குடியின தம்பதி (காணொளி)
யானை, ஆஸ்கர்

பெற்றோரை இழந்து தவிக்கும் 4மாத குட்டியானை ஒன்று ஆஸ்கர் புகழ் பொம்மன், பெல்லி தம்பதியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கட்டமடுவு கிராமத்தில் இருக்கும் ஒரு விவசாய கிணற்றில், கடந்த மார்ச் 11ஆம் தேதி 4 மாத குட்டி யானை ஒன்று தவறி விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறை அதிகாரிகளும் தீயணைப்பு துறையினரும் வந்து குட்டி யானையை மீட்டனர்.

தற்போது இந்த குட்டியானையை வளர்க்கும் பணி `எலிபண்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படத்தில் நடித்திருந்த பொம்மன், பெல்லி தம்பதியிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: