விஜய் உள்ளிட்டோரின் படங்கள் படமாக்கப்பட்ட பொள்ளாச்சி ஷூட்டிங் ஸ்பாட் களையிழக்கிறதா?
விஜய் உள்ளிட்டோரின் படங்கள் படமாக்கப்பட்ட பொள்ளாச்சி ஷூட்டிங் ஸ்பாட் களையிழக்கிறதா?
கோவை அருகே உள்ள பொள்ளாச்சி, தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக பிரபல ஷூட்டிங் ஸ்பாட்டாக உள்ளது. ரவிச்சந்திரன், நாகேஷ் முதல் விஜயகாந்த், விஜய் வரை எண்ணற்ற நடிகர்களின் திரைப்படங்கள் இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன. வயல், நீர் நிலை என ரம்யமான இயற்கைக் காட்சிகள் நிறைந்த அமைதியான பொள்ளாச்சி பல நடிகர்களின் ஹிட் படங்களில் இடம் பிடித்துள்ளது.
தமிழ் மட்டுமல்லாமல், மோகன்லால், ஷாருக்கான் என மலையாளம், இந்தி சினிமா நடிகர்களின் படங்களும் இங்கே எடுக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி மக்களின் அன்றாட வாழ்வில் ஷூட்டிங் கேமராக்கள் சர்வ சாதாரணமாக அங்கம் வகித்தன.
ஆனால் இன்று நிலைமைகள் மாறியுள்ளன. இந்த பிரபல ஷூட்டிங் ஸ்பாட் இன்று எப்படி உள்ளது என்ற பிபிசியின் கள அறிக்கையை இந்த காணொளி வழங்குகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



