செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா: 300 கிராம் மாதிரியை பூமிக்கு எப்படி கொண்டு வருகிறது?
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களின் தடயங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதற்கு அங்கிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர வேண்டும் என்பது நாசாவின் நீண்ட கால திட்டம்.
தற்போது அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் நாசா பெரிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. தற்போது உள்ள நிதியை வைத்து 2040-ஆம் ஆண்டுக்கு முன் செவ்வாயின் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர முடியாது என்றும், இத்திட்டத்திற்கு 91,800 கோடி ரூபாய் (11 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) வரை செலவழிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இந்தத் தொகையை விட குறைந்த செலவில், விரைவாக இத்திட்டத்தை செயல்படுத்த, மாறுபட்ட சிந்தனைகளுக்கான (‘அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ ஐடியா) தேடலை நாசா தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிற்குள் புதிய திட்டத்திற்கான மாதிரி உருவாக்கப்படும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



