இந்திய வான்வழித் தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,
இந்திய வான்வழித் தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் கூறியது என்ன?

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகிக்கும் காஷ்மீர் பகுதிகளில் மே 7 அன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. அதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தன்னுடைய நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இந்தியா தவறு செய்துள்ளது. அதன் விளைவுகளை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தாலும், தீவிரவாத இலக்குகள் மட்டுமே குறி வைக்கப்பட்டதாகவும், பொது மக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் இந்தியா கூறுகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.