வரதட்சணை கொடுக்க சேமித்த பணத்தில் டிரெக்கிங் சென்ற பெண்

காணொளிக் குறிப்பு, வரதட்சனைக்கு எதிராக ஏழு கண்டங்களில் உள்ள உயரமான எழு மலைகளின் உச்சத்தை தொடுவேன் என்கிறார, ஸ்மிதா குகே
வரதட்சணை கொடுக்க சேமித்த பணத்தில் டிரெக்கிங் சென்ற பெண்

வஞ்சரி சமூகத்தில் வரதட்சணை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நகைகளாகவோ, அல்லது விலை உயர்ந்த அன்பளிப்பாகவோ கேட்பது சகஜம் எனக்கூறும் ஸ்மிதா, அதற்கு எதிராக ஏழு கண்டங்களில் உள்ள உயரமான ஏழு மலைகளுக்கு 'ட்ரெக்கிங்' சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

முதலில் தான் இளங்கலை பட்டம் மட்டுமே படித்திருந்ததை காரணம்காட்டி தன்னை நிராகரித்த ஆண்கள், பின், தான் படித்த பட்டம் பிடிக்கவில்லை என்றும், பின் வெளிநாட்டு மொழி தெரியவில்லை என்றும் தான் நிராகரிக்கப்பட்டதாகப் பகிர்ந்துகொண்டார் ஸ்மிதா குகே

ஸ்மிதா குகே
படக்குறிப்பு, மலையேறுவதன் மூலம் வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ஸ்மிதா

கடைசியில், தான் உயரம் குறைவாக இருப்பதால், தனக்கு வரும் மாப்பிள்ளைகள் தன்னை நிராகரிக்கத் தொடங்கியதாகக் கூறினார் ஸ்மிதா.

"அப்போது தான் எங்க சார் சொன்னார். நம்ம உயரத்த நம்மால் மாற்ற முடியாது. ஆனால், நம்ம முயற்சி செய்தால் நம்முடைய குணங்களை மாற்றலாம், முன்னேறி செல்லாம் என என்னை ஊக்கப்படுத்தினார். அப்போதுதான், உலகில் உள்ள ஏழு கண்டங்களில் உள்ள உயரமான ஏழு மலைகளின் உச்சத்தை தொட வேண்டும் என முடிவு செய்தேன்," என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: