காணொளி: 'சீனா உதவ வேண்டும்'- டிரம்ப் சொன்னது என்ன?

காணொளிக் குறிப்பு, ‘சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் சந்திப்பு’- டிரம்ப் சொன்னது என்ன?
காணொளி: 'சீனா உதவ வேண்டும்'- டிரம்ப் சொன்னது என்ன?

“ரஷ்யா விஷயத்தில் சீனா எங்களுக்கு உதவ வேண்டும் என விரும்புகிறேன்.” என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

“நாங்கள் ரஷ்யாவுக்கு மிகப் பெரிய தடைகளை விதித்துள்ளோம். அவை மிகவும் கடுமையாகவும் தாக்கம் உள்ளதாகவும் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் சீனா எங்களுக்கு உதவுவதைக் காண விரும்புகிறேன். அதிபர் ஷி ஜின்பிங் உடன் எனக்கு மிகவும் நல்ல உறவு உள்ளது. மிகச் சிறந்தது. நாங்கள் சந்திக்க உள்ளோம். அது ஒரு நல்ல சந்திப்பு. நிச்சயம் அது ஒரு சிறந்த சந்திப்பாக இருக்கும், ஒருவேளை மிகச் சிறந்ததாகவும் இருக்கலாம். நாங்கள் சில நல்ல வர்த்தகங்களை மேற்கொள்ள உள்ளோம்.” என்று அவர் கூறினார்.

“ரஷ்யா - யுக்ரைன் போர் குறித்து நாங்கள் பேச உள்ளோம். அவர்கள் வாரத்திற்கு சுமார் 7,000 பேரை, பெரும்பாலும் ராணுவ வீரர்களை கொல்கின்றனர். அதைப் பற்றி நிச்சயமாக பேசுவோம். அவரும் போர் முடிவடைய விரும்புகிறார்.” என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு