காணொளி: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு
காணொளி: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு
வாஷிங்டன் டி.சி.யில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தேசிய காவலர் உறுப்பினர்கள் படுகாயமடைந்தனர் என்று எஃப்.பி.ஐ இயக்குனர் காஷ் படேல் தெரிவித்தார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்தியவர் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:15 மணிக்கு தேசிய காவலர் உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சம்பவம் வெள்ளை மாளிகை அருகே நடந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு வந்த ஆப்கன் நாட்டைச் சேர்ந்த ரஹ்மானுல்லா லகன்வால் தாக்குதல் நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படுகிறது என, சட்ட அமலாக்க வட்டாரங்கள் பிபிசியின் அமெரிக்க கூட்டாளி சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



