ஆடைக்குள் மறைத்து பலநூறு பூரான்கள், சிலந்திகள், பூச்சிகளை கடத்திய நபர் பிடிபட்டது எப்படி?

காணொளிக் குறிப்பு, டரான்டுலா வகை சிலந்திகளையும் பூரான்களையும் கடத்திய நபர் அதிகாரிகளிடம் சிக்கியது எப்படி?
ஆடைக்குள் மறைத்து பலநூறு பூரான்கள், சிலந்திகள், பூச்சிகளை கடத்திய நபர் பிடிபட்டது எப்படி?

பெரு நாட்டிலிருந்து விமானம் மூலமாக தென் கொரியாவுக்கு தப்பிக்க முயன்ற நபரிடம் இருந்து நூற்றுக் கணக்கில் டரான்டுலா வகை சிலந்திகளையும், பூரான்களையும், பூச்சிகளையும் கைப்பற்றியுள்ளனர் விமான நிலைய அதிகாரிகள்.

வழக்கத்திற்கு மாறாக அவருடைய வயிறு பெரிதாக இருந்ததால் அதிகாரிகள் அவரின் உடலை சோதனை செய்தனர். அப்போது அவரின் உடலில் ப்ளாஸ்டிக் பைகளில் இந்த சிலந்திகள், எறும்புகள் மற்றும் பூரான்களை பத்திரப்படுத்தி உடலோடு மறைத்து வந்தது தெரியவந்தது.

அந்த பூச்சியினங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முழு விபரம் இந்த காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)