ஈர்ப்பு விசை விதிகளை மீறும் கல் சிற்பக் கலையில் அசத்தும் மகாராஷ்டிரா இளைஞர்

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிரா: புவியீர்ப்பு விசையை மீறும் கல் சிற்பங்களை உருவாக்கும் 'ராக் பேலன்சிங்' கலைஞர்
ஈர்ப்பு விசை விதிகளை மீறும் கல் சிற்பக் கலையில் அசத்தும் மகாராஷ்டிரா இளைஞர்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த கௌதம் வைஷ்ணவ் புவியீர்ப்பு விசையை மீறும் கல் சிற்பங்களை உருவாக்குகிறார்.

இது பாறையை சமநிலைப்படுத்தும் கலை என அழைக்கப்படுகிறது.

"முதலில் ஒரு பாறையை சமநிலைப்படுத்த 45 நிமிடம் எடுத்தது. நான் விரக்தியடைந்தேன், பதற்றம் அடைந்தேன். அவற்றை துண்டுதுண்டாக்கி தூக்கி எறிய வேண்டும் போல இருந்தது. ஆனால், 45 நிமிடம் கழித்து சமநிலைப்படுத்திய போது காற்றில் பறப்பது போல இருந்தது."

"அது அற்புதமாக இருந்தது. அதன் பிறகு சமநிலையற்ற பாறைகளை தேர்ந்தெடுத்தேன். அவை பார்க்க நன்றாக இருந்தன." என்கிறார் ராக் பேலன்சிங் கலைஞர் கெளதம் வைஷ்ணவ்.

ஆனால், பாறைகளை அடுக்குவது இயற்கைக்கு தீங்கு விளைவிக்கலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)