வெப் கேம் தொழிலில் ஈடுபடும் பெண்களின் நிலை என்ன? அதிர்ச்சியான மறுபக்கம்
வளர்ந்து வரும் அடல்ட் வெப்கேமிங் (Adult webcamming) என்ற இந்த தொழில், வயது வந்தோருக்கான உள்ளடக்கங்கள் எப்படி நுகரப்படுகின்றன மற்றும் இதன் மூலம் எப்படி வருமானம் ஈட்டப்படுகிறது என்பதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவில் இது போன்று ஆயிரக்கணக்கான பெண்கள் வெப்கேம் ஸ்டியோக்களில் பணியாற்றுகின்றனர். உலகெங்கிலும் உள்ள ஆண்களுக்காக நேரலையில் பாலியல் செய்கைகளில் ஈடுபடுகின்றனர் இப்பெண்கள்.
இந்த மாடல்களால் அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடிகிறது. வீடு, கார்கள் வாங்க முடிகிறது. இதன் மூலம் வரும் வருமானம் அவர்களுக்கு மட்டுமின்றி முழு நாட்டிற்கும் உதவுகிறது.
வெப்கேம் ஸ்டூடியோக்கள் இது போன்ற உள்ளடக்கங்களை மக்கள் நேரலையில் நிகழ்ச்சிகளைப் பார்க்கக்கூடிய இணையதளங்களுக்கு வழங்குகின்றன. ஐரோப்பா, அமெரிக்காவை தளமாகக் கொண்டு குறைந்த அளவிலேயே இயங்கும் இதுபோன்ற தளங்கள், இந்த துறையை கட்டுப்படுத்துகின்றன.
குறிப்பாக கொலம்பியாவில், இவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தாலும், பெண்கள் பாலியல் சுரண்டல் மற்றும் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது எங்களின் புலனாய்வில் தெரியவந்தது.
இந்த வெப்கேமிங் ஸ்டூடியோவில் பணியாற்றும் பெண்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



