காணொளி: லண்டனில் ஈலோன் மஸ்க் பேசிய பேரணியில் வன்முறை : நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, லண்டனில் திரண்ட 1.5 லட்சம் மக்கள்; மஸ்க் பேசியதென்ன?
காணொளி: லண்டனில் ஈலோன் மஸ்க் பேசிய பேரணியில் வன்முறை : நடந்தது என்ன?

சனிக்கிழமை லண்டனில் 'யூனைட் தி கிங்டம்' என்ற பெயரில் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் டாமி ராபின்சன் பேரணி ஒன்றை முன்னெடுத்தார். சுமார் 1.5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த பேரணியில் வன்முறை வெடித்தது.

சிலர் போலீசார் மீது பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களை வீசியதாகவும், இதன் காரணமாக 26 போலீசார் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது? முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு