காணொளி: சீனாவின் புதிய ஆயுதங்கள் எவ்வளவு பலமானவை?

காணொளிக் குறிப்பு, சீனாவின் புதிய ஆயுதங்கள் எவ்வளவு பலமானவை?
காணொளி: சீனாவின் புதிய ஆயுதங்கள் எவ்வளவு பலமானவை?

சீனாவின் ராணுவ வலிமையை உலகுக்கு காட்டும் வகையில், பெய்ஜிங்கில் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில், புதிதாக உருவாக்கப்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்கள், லேசர் ஆயுதங்கள், கூடவே ரோபோ நாய்களும் களத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

இதில் பல்வேறு புதிய வகை ஆயுதங்கள், ட்ரோன்கள் போன்றவற்றை வெளி உலகுக்கு சீனா காட்சிப்படுத்தியது.

இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்ததன் 80ஆவது ஆண்டையொட்டி நடந்த இந்த நிகழ்ச்சியில், சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த ராணுவ அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட சில ஆயுதங்கள் பற்றி சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவை என்னென்ன? தனது ஆயுதங்களை காட்சிபடுத்தியதன் மூலம் சீனா சொல்ல வரும் செய்தி என்ன? முழு விவரங்கள் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.