அயலான்: தமிழ் ஏலியன் ரசிக்க வைத்ததா? படம் எப்படி இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, அயலான்: தமிழ் ஏலியன் ரசிக்க வைத்ததா? படம் எப்படி இருக்கிறது?
அயலான்: தமிழ் ஏலியன் ரசிக்க வைத்ததா? படம் எப்படி இருக்கிறது?

பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'அயலான்' திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் கலகலப்பான படமாக வந்துள்ளது.

வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன், பணத்தாசை பிடித்த தொழிலதிபர் ஒருவரின் பிடியிலிருந்து சமூகத்தைக் காக்க, விவசாயியான சிவகார்த்திகேயனுடன் இணைந்து செயல்படுகிறது.

படத்தின் முதல் பாதியில், ஏலியனின் பார்வையில் உலகைக் காட்டும் காட்சிகள் சிரிப்பைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. கருணாகரன், யோகி பாபு ஆகியோர் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளனர். இரண்டாவது பாதியில் படம் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக உள்ளது என்று ஊடகங்கள் தங்கள் விமர்சனங்களில் குறிப்பிட்டுள்ளன.

ஏலியன் படங்கள் புதிதல்ல என்றாலும் அவை பெரும்பாலும், ஹாலிவுட் படங்களிலேயே பயன்படுத்தப்பட்டது. தமிழ் ரசிகர்கள் அதை மொழிபெயர்ப்புப் படமாக மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் கதை ஒன்றில் ஏலியனை பொருத்திப் பார்த்து ரசிக்கும் வாய்பை இயக்குநர் ரவிக்குமார் உருவாக்கி தந்திருக்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)