மொசாட் அமைப்பின் வெற்றி தோல்விகள் என்ன? - இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் பங்களிப்பது எப்படி?

காணொளிக் குறிப்பு, இஸ்ரேலிய தாக்குதல்களில் முக்கிய பங்கு வகிக்கும் மொசாட் அமைப்பின் வெற்றிகளும் தோல்விகளும்
மொசாட் அமைப்பின் வெற்றி தோல்விகள் என்ன? - இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் பங்களிப்பது எப்படி?

சமீபத்திய தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம், இஸ்ரேல் இரானிய அணு நிலையங்கள், ராணுவ தளங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளை குறிவைத்துள்ளது.

தாக்குதல்கள் வான்வழியாக நடத்தப்பட்டாலும், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட், இலக்குகளைக் கண்டறிந்து தரையிலிருந்து நடவடிக்கைகளை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஜூன் 13 அன்று இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான முக்கிய இரானிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் துல்லியமாக குறி வைக்கப்பட்டனர். இது இஸ்ரேல் அவர்களின் இருப்பிடம் குறித்து உளவுத்துறை தகவல்களைப் பெற்றிருப்பதைக் குறிக்கிறது.

முன்னதாக தங்கள் பாதுகாப்புப் படைகளில் இஸ்ரேலிய உளவுத்துறை ஊடுருவியிருக்கலாம் என சந்தேகிப்பதாக இரானிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

இந்த நிகழ்வுகளில் மொசாட் அமைப்புக்கு தொடர்புள்ளதா என கூறுவது எளிதல்ல. காரணம், அந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து இஸ்ரேல் அரிதாகவே பொதுவெளியில் கருத்துக்களை பகிர்கிறது. மேலும் அந்நாட்டு உளவுத்துறையில் பிற பிரிவுகளும் உள்ளன.

மொசாட் அமைப்பின் கடந்தகால செயல்பாடுகள் என்ன? அவற்றின் வெற்றி, தோல்வி போன்றவற்றை இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு