முகலாயர் காலம் முதல் இன்று வரை பிரபலமாக விற்பனையாகும் சந்தேரி சேலைகள்

காணொளிக் குறிப்பு, மத்திய பிரதேச சந்தேரி நகரத்தின் சேலைகள் 700 ஆண்டு பாரம்பரியம் கொண்டவை.
முகலாயர் காலம் முதல் இன்று வரை பிரபலமாக விற்பனையாகும் சந்தேரி சேலைகள்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான சந்தேரியின் அழியா அடையாளமாக சந்தேரி சேலைகள் கடந்த 700 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்றன.

மராட்டிய பேரரசு காலத்தில் இந்த புடவைகளின் பொற்காலமாக இருந்தன. அரசு குடும்பங்கள் விரும்பி அணிந்து கொண்ட சேலைகளாக இவை இருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகள் கொண்டு அலங்கரிக்கப்படும் இந்த சேலைகள், சீனா மெக்சிக்கோலிருந்து வரும் இழைகள் கொண்டு நெய்யப்படுகின்றன. இதன் விலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை ஆகும்.

சந்தேரி சேலை

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)