'அரேபியர்கள் எங்கே போனார்கள்?' - கேள்வி எழுப்பும் பாலத்தீன மக்கள்

காணொளிக் குறிப்பு, காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில் 2300 பேர் உயிரிழந்துள்ளனர்.
'அரேபியர்கள் எங்கே போனார்கள்?' - கேள்வி எழுப்பும் பாலத்தீன மக்கள்

காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில் 2300 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் 1300க்கும் அதிகமான கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள் "நாங்கள் மிருகங்கள் அல்ல, மனிதர்கள்" என கதறுகின்றனர். காஸாவில் தாக்குதல்கள் நடக்கும் போது அரேபியர்கள் எங்கே போனார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.

இஸ்ரேல் தான் குழந்தைகளைக் கொல்வதாகவும், எவ்வளவு தாக்குதல் நடத்தினாலும் காஸா தங்கள் இடம், அங்கிருந்து செல்ல மாட்டோம் என பாலத்தீனர்கள் கூறுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)