அமெரிக்க படைத்தளம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது யார்? மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்

காணொளிக் குறிப்பு, சிரியா - ஜோர்டன் எல்லையில், அமெரிக்க ராணுவத்தினர் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அமெரிக்க படைத்தளம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது யார்? மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்

சிரியா - ஜோர்டன் எல்லையில், அமெரிக்க ராணுவத்தினர் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கிய பிறகு அமெரிக்க ராணுவத்தினர் மீது நேரடி தாக்குதல் நடத்துவதே இதுவே முதல் முறையாகும்.

இந்த தாக்குதலுக்கு இரான் ஆதரவு பெற்ற குழுவே காரணம் என்றும் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை இரான் மறுத்துள்ளது.

இந்த தாக்குதலில் மூன்று பேர் பலியானதோடு 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. பொதுமக்களும் கூட பாதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் அமெரிக்க மற்றும் பிற நாட்டு கப்பல்களை தாக்கி வந்தனர். வணிக ரீதியில் பயணம் மேற்கொள்ளும் கப்பல்களை தாக்குவது கண்டனத்துக்குரியது என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏற்கனவே தெரிவித்துள்ளன. இந்நிலையில், தற்போது இந்த ட் ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அக்டோபர் 17ம் தேதி முதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப்படைகள் 97 முறை குறிவைக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க கடந்த மாதம் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தளம் மீது தாக்குதல்

பட மூலாதாரம், PLANET LABS/AP

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)