டெம்பா பவுமா: தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் கேலி செய்யப்படுவது ஏன்?
உலகக்கோப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு, ‘கேப்டன்ஸ் டே’ எனப்படும் உலகக்கோப்பையில் விளையாடும் பத்து அணிகளின் கேப்டன்களும் பங்கேற்கும் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடந்தது. இந்த செய்தியாளர் சந்திப்பில் டெம்பா பவுமா தூங்குவது போலிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. தான் தூங்கவில்லை என்றும் அந்த கேமரா கோணத்தினால்தான் அப்படி தெரிந்ததாகவும் டெம்பா பவுமா விளக்கமளித்தார். இந்த விளக்கத்தை அவர் தருவதற்கு முன்பே பவுமா பற்றி பல மீம்கள் வைரலாகின.
அதன்பிறகு, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் வெள்ளை டவல் போர்த்தி பவுமா அமர்ந்திருந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது. தென்னாப்பிரிக்க அணி மும்பையில் நடந்த இரண்டு போட்டிகளிலும் டெம்பா பவுமா விளையாடவில்லை. இருந்தாலும் அவரின் பெயர் செய்திகளில் இருந்துகொண்டே இருந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்ற பிறகு, அவரது கொண்டாட்டத்தின் வீடியோவும் தொடர்ந்து எல்லாராலும் பகிரப்படுகிறது.
ஒரு வீரராக பவுமாவின் சுமாரான ஆட்டமும் அவர் ட்ரோல் செய்யப்படுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



