'5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன' - இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து டிரம்ப் கூறிய புதிய தகவல்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் போது 'ஐந்து போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
''இந்தியா - பாகிஸ்தான் மோதலில் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என நினைக்கிறேன். அது மோசமாகிக் கொண்டே போனது, இல்லையா? அவை இரண்டும் அணு ஆயுத நாடுகள். ஒன்றையொன்று தாக்கிக் கொண்டிருந்தன. இது புதிய மாதிரியான போர் போல் தெரிகிறது. சமீபத்தில் இரானில் அவர்களின் அணு ஆயுதத் திறனை நாம் முற்றிலும் முறியடித்தோம். அது நீண்ட காலத்துக்கு இல்லாமல் போகும்.
ஆனால், இந்தியா பாகிஸ்தான் மோதலில் இரு நாடுகளும் பதிலுக்கு பதில் தாக்குதல்களை நடத்தின. இது வேறு மாதிரியான விஷயம். அது பெரிதாகிக் கொண்டே இருந்தது.
வர்த்தகத்தின் மூலம் அதை சரிசெய்தோம். நீங்கள் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறீர்களா?
ஆயுதங்களையும், அணுஆயுதங்களையும் வீசப் போகிறீர்கள் என்றால், நாங்கள் எந்த வர்த்தக ஒப்பந்தமும் செய்ய மாட்டோம் என கூறினோம்.'' என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.



