காணொளி: தோற்றப் பொலிவுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இளம் பெண்ணின் அனுபவம்

காணொளிக் குறிப்பு, பிளாஸ்டி சர்ஜரி செய்ய விரும்பும் இளைஞர்கள்
காணொளி: தோற்றப் பொலிவுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இளம் பெண்ணின் அனுபவம்

எமிலி போன்ற இளைஞர்கள் தற்போதே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் முடிவிற்கு வருகின்றனர். தோற்றம் வயதானதைப் போல உணரும் இளைஞர்கள் ஃபேஸ் லிஃப்ட் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்.

சமூகம் தோற்றத்திற்கு அதிக மதிப்பு கொடுப்பதால் இளைஞர்கள் அழுத்தமாக உணர்வதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சில பிளாஸ்டிக் சிகிச்சை மருத்துவர்கள் தன்னிடம் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வரும் இளைஞர்களை திருப்பி அனுப்புவதாகக் கூறுகின்றனர்.

அறுவை சிகிச்சைக்கு மாற்றாக வேறு சிகிச்சைகளையும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் எமிலி போன்று சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் மகிழ்ச்சியாகவே உணர்வதாக தெரிவிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு