லண்டனில் போன் திருடிய நபர் ஒற்றை ஷூவால் சிக்கியது எப்படி?

காணொளிக் குறிப்பு, லண்டனில் போன் திருடர் ஒற்றை ஷூவால் சிக்கியது எப்படி?
லண்டனில் போன் திருடிய நபர் ஒற்றை ஷூவால் சிக்கியது எப்படி?

லண்டன் நகர சாலையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்,

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி லட்கேட் ஹிலில் இ பைக்-ல் வந்த 28 வயதான ஸ்பென்சர் டுவார்ட், ஒருவர் கைபேசியை பறித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் தள்ளியதால் தடுமாறி தனது ஒரு ஷூவை விட்டுவிட்டுச் சென்றார்.

அந்த ஷூவை போலீஸார் டி.என்.ஏ சோதனைக்காக அனுப்பி, தேசிய தரவுத்தொகுப்பில் இருந்த தகவல்களின் மூலம் ஸ்பென்சர் டுவார்டை கண்டறிந்தனர்.பின்னர் நீதிமன்றம் அவருக்குத் தண்டனை விதித்தது

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு