‘தீபாவளியன்றும் மக்களுக்கு சேவை செய்வதே சந்தோஷம்’ – மக்கள் பணி செய்வோரின் குரல்

காணொளிக் குறிப்பு, ‘தீபாவளியன்றும் மக்களுக்கு சேவை செய்வதே சந்தோஷம்’ – இந்தப் பணியாளர்கள் சொல்வது என்ன?
‘தீபாவளியன்றும் மக்களுக்கு சேவை செய்வதே சந்தோஷம்’ – மக்கள் பணி செய்வோரின் குரல்

தீபாவளி என்றாலே, பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் விடுமுறை, அனைவரும் வீட்டில் தங்கள் குடும்பத்துடன் இனிப்புகள், புத்தாடை, பட்டாசுகளுடன் கொண்டாடுவது, ஆகியவை தான் பெரும்பாலானவர்களின் நினைவுக்கு வரும். சிலருக்கு புதுப்படங்களுக்குச் செல்வது நினைவுக்கு வரும்.

தீபாவளியன்று வேலைக்குச் செல்வது நம்மில் பலருக்கும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று.

ஆனால், இந்தப் பண்டிகை நாளன்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளும் சேவைகளும் தடைபடாமல் கிடைக்க, பலர் தங்கள் கொண்டாட்டங்களைத் தியாகம் செய்துவிட்டு அலுவலகங்களுக்கும் பணிக்கும் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

காவலர்கள், போக்குவரத்துக் காவலர்கள், தீயணைப்புத் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆகிய அத்தியாவசியச் சேவைகளை வழங்குபவர்களுக்கு தீபாவளியும் வேலைநாள்தான்.

அதேபோல், தீபாவளி சீசனிலும், பண்டிகையன்றும் விற்பனையாகும் பட்டாசுகள், இனிப்புகள், ஆட்டுக்கறி ஆகியவற்றை வியாபாரம் செய்யும் சிறுவியாபாரிகள் ஆகியோரும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தீபாவளியைத் துறந்து வேலைசெய்யத்தான் வேண்டும்.

இப்படி, தமிழகம் முழுவதும், பண்டிகை நாளன்றும் ஓய்வின்றி உழைக்கும் மக்களில் சிலரை பிபிசி தமிழ் சந்தித்து, தீபாவளி பற்றிய அவர்களது கருத்துக்களைக் கேட்டது.

அவர்கள் சொல்வது என்ன?

தீபாவளி

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)