கொச்சி அருகே நடுக்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் - உள்ளே இருந்த 24 பேர் என்ன ஆயினர்?

காணொளிக் குறிப்பு, நீரில் மூழ்கிய சரக்கு கப்பல்; கொச்சியை நோக்கி வந்த கப்பல் விபத்துக்குள்ளானது எப்படி?
கொச்சி அருகே நடுக்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் - உள்ளே இருந்த 24 பேர் என்ன ஆயினர்?

லைபீரியா கொடியுடன் சென்ற எம்.எஸ்.சி எல்சா-3 என்ற சரக்கு கப்பல் கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

24ஆம் தேதி கொச்சி துறைமுகத்துக்கு செல்ல வேண்டிய இந்த கப்பல் கொச்சியில் இருந்து தென்மேற்கில் 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் சாய்ந்தது. இந்த கப்பலின் நீளம் 184 மீட்டர் ஆகும்.

ஞாயிற்றுக் கிழமை காலை இந்த கப்பல் கடலில் மூழ்கியதாகவும் கப்பலில் இருந்த 24 பேரும் மீட்கப்பட்டதாகவும் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு