மலை உச்சியில் இருந்து உருளும் பாலாடைக் கட்டியை துரத்தும் விநோத போட்டி (காணொளி)

காணொளிக் குறிப்பு, சீஸ் துண்டுகளை துரத்தி மலை உச்சியிலிருந்து உருண்டு வரும் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.
மலை உச்சியில் இருந்து உருளும் பாலாடைக் கட்டியை துரத்தும் விநோத போட்டி (காணொளி)

பிரிட்டனில் பாரம்பரியமாக ஆண்டுதோறும் நடக்கும் Cheese rolling போட்டி எனப்படும் மலை உச்சியில் இருந்து உருட்டிவிடப்படும் சீஸ் துண்டை துரத்திச் செல்லும் போட்டி நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான சாகச விரும்பிகள் க்ளோஸெஸ்டர்ஷயரில் நடந்த இப்போட்டியில் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் 180 மீட்டர் உயர மலையில் இருந்து 3 கிலோ சீஸ் மலையில் உருட்டிவிடப்படும். போட்டியாளர்கள் அதனை துரத்திச்செல்வார்கள். யார் முதலில் கீழே சென்று சீஸ் துண்டை எடுக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்.

ஆபத்தான விளையாட்டான இதில் ஆண்டுதோறும் காயங்கள் ஏற்பட்டாலும் யாரும் இதுவரை இறந்ததில்லை என போட்டியின் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

போட்டியாளர்கள் உருண்டு வரும் காட்சிகளை வீடியோவில் காணலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு