ஆள் யாரும் தேவையில்லை - ஒரு மணி நேரத்தில் 40,000 பானி பூரி செய்து அசத்தும் மெஷின்

காணொளிக் குறிப்பு, ஆள் யாரும் தேவையில்லை - ஒரு மணி நேரத்தில் 40,000 பானி பூரி செய்து அசத்தும் மெஷின்
ஆள் யாரும் தேவையில்லை - ஒரு மணி நேரத்தில் 40,000 பானி பூரி செய்து அசத்தும் மெஷின்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் கஜ்ஜாரின் நிறுவனம் தானியங்கி பானிபூரி மெஷின்களை உற்பத்தி செய்கிறது.

இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள பானி பூரி தயாரிக்கும் இயந்திரத்தால் ஒரு மணி நேரத்தில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பானி பூரி வரை குறைந்த நபர்கள் உதவியுடன் தயாரிக்கிறது.

சில இடங்களில் காலால் மாவை பிசைந்து பானி பூரி தயாரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதை தவிர்க்கவே தானியங்கி பானிபூரி இயந்திரங்களை உருவாக்கியதாக கூறுகிறார் ஆகாஷ் கஜ்ஜார்.

இந்த இயந்திரத்தில் மாவை கொட்டி, தண்ணீர் ஊற்றினால், தானாக மாவு பிசைந்து அதை சிறு சிறு வட்டங்களாக வெட்டி பானி பூரி மாவாக வெளியே தள்ளுகிறது இந்த இயந்திரம்.

அதை வேறு ஒரு இயந்திரத்தின் உதவியுடன் பொறித்து எடுத்து பானி பூரியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் மக்களுக்கு வழங்க முடிகிறது.

மேலும் பானி பூரியில் ரசத்தை ஊற்றுவதற்கு பிரத்யேகமாக ஒரு இயந்திரம் இவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது

இங்கு உருவாக்கப்படும் இயந்திரங்களில் பெரும்பாலானவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நன்றி: சாகர் படேல்/பவன் ஜெய்ஷ்வால்

தயாரிப்பு: பார்த் பாண்டியா

பானி பூரி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: