ஹமாஸ் முக்கிய தலைவர்கள் 2 பேரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
வெள்ளிக்கிழமை இரவு ஹமாஸ் படையினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் விமானப் படையின் மூத்த தலைவர் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதேபோல், ஹமாஸ் எலைட் பிரிவு கமாண்டர்களில் ஒருவரும், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு காரணமானவருமான அலி காதியும் கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
எக்ஸ் தளத்தில், அரபு ஊடகங்களுக்கான இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித்தொடர்பாளர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இதேபோல லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் ஊருவ முயன்ற ஆயுதக்குழுவினர் மீது தாக்குதல் நடத்தி அழித்திருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காசா மீதான இஸ்ரேல் படையினரின் தாக்குதலுக்கு இதுவரை குறைந்தது 2,215 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் பாலத்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



