டிரம்ப் பேசுவது நாய் குரைப்பதை போன்றது - வட கொரியா
வட கொரியாவின் உயர் தூதர் ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐ.நா பொதுச்சபையில் நிகழ்த்திய உரையை ஒரு நாய் குரைக்கும் சத்தத்தை போன்றது என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES
புதன்கிழமையன்று ஐ.நா பொதுச்சபையில் பேசிய டிரம்ப், அமெரிக்கா அல்லது அதன் கூட்டாளிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தால் வட கொரியா முற்றிலும் அழிக்கப்படும் என்றார்.
வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரி யோங் கோ-வின் கருத்துக்கள் தான் டிரம்ப்பின் பேச்சு குறித்து வட கொரியாவின் முதல் அதிகாரப்பூர்வ பதிலாகும்.
ஐ.நா.-வின் தடைகளையும் மீறி தொடர்ந்து வட கொரியா தனது அணுசக்தி மற்றும் ஆயுதத் திட்டங்களை அபிவிருத்தி செய்து வருகிறது.
நாய் குரைத்தாலும் அணிவகுப்பு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என ஒரு பழமொழி உள்ளது என்று டிரம்ப்பின் பேச்சு குறித்து நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்திற்கு அருகே நிருபர்களிடம் ரி கூறினார் .
அவரது நாய் குரைப்பது போன்ற மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிவோம் என டிரம்ப் நினைத்தால் நிச்சயமாக அவர் கனவு காண்கிறார் என்று தான் அர்த்தம் என ரி தெரிவித்தார்.
வட கொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
ஐ.நா.வில் பேசிய டிரம்ப் தன்னையும் தன் ஆட்சியையும் தானே அழித்து கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள ராக்கெட் மனிதன் அவர் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னை அவர் சாடினார்.
வட கொரிய அதிபர் கிம்-மை ராக்கெட் மனிதன் என டிரம்ப் கூறிய போது தாங்கள் என்ன நினைத்தீர்கள் என ரி-யிடம் கேள்வியெழுப்பியபோது தான் டிரம்ப்பின் உதவியாளர்கள் குறித்து வருந்துவதாக அவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமையன்று ரி ஐ.நா.வில் உரை நிகழ்த்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக வடக்கு பகுதிக்கு புதிய மனிதாபிமான உதவிகளை அனுப்பவிருப்பதாக தென் கொரியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
சியோலில் ஒருங்கிணைப்பு அமைச்சகம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மருத்துவ பொருட்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கிய ஐ.நா. திட்டங்கள் மூலம் 8 மில்லியன் டாலர்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
பியோங்கியாங்கிற்கு எதிராக, எண்ணெய் இறக்குமதிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் ஜவுளி ஏற்றுமதிகளை தடை செய்வது போன்ற புதிய தடைகளுக்கு ஒப்புதல் வழங்கும் ஐ.நா.வின் முடிவிற்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள்து. இது வடகொரியாவின் எரிபொருள் மற்றும் அதன் ஆயுத திட்டங்களுக்கான வருமானத்தை வலுவிழக்கச் செய்யும் ஒரு முயற்சி ஆகும்.
ஐ.நா.வின் இந்த முடிவு செப்டம்பர் 3-ஆம் தேதி வடகொரியா நடத்திய அணுஆயுத சோதனைக்கு பதில் அளிப்பதாக அமைந்துள்ளது.
வட கொரியா நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் அணுசக்தி ஆயுதங்களின் வளர்ச்சியில் வியக்கத்தக்க விரைவான முன்னேற்றத்தை கண்டிருக்கிறது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்
- இலவச சேலைகளை தீயிட்டுக் கொளுத்தி கொந்தளிக்கும் தெலங்கானா பெண்கள்
- நவராத்திரியின் போது சன்னி லியோனின் 'ஆணுறை' விளம்பரம் : குஜராத்தில் கொதிப்பு?
- பெரும் உயிர்த் தியாகத்துடன் டோக்ரை யுத்தத்தை வென்றது இந்தியா
- தெருவில் பெண் சிறுநீர் கழித்த பிரச்சனை, உரிமைப் போராட்டமாக வெடித்த சுவாரஸ்யம்!
- இணைய அழைப்புகள் மீதான தடையை நீக்குகிறது செளதி அரேபியா
- நுரையீரல் புற்றுநோய் நோயாளியின் வாழ்நாளை அதிகரிக்கும் மருந்துக்கு அனுமதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













